பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடகாவில் பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கும்மவான் பள்ளியில் கூடாராம் ஒன்றை அமைத்து மகேஷ் - நீலவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

கூலி வேலை செய்து அன்றாடம் சாப்பிடும் இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையில் நீலவேணி தனது சகோதரி மகளான வனிதா என்ற குழந்தையையும் வளர்த்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று பசியால் வாடிய குழந்தை மண்ணை சாப்பிட்டதில் வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது. அக்குழந்தையின் உடலை பெற்றோர் அங்கேயே புதைத்துள்ளனர்.

இக்குழந்தை மட்டுமல்லாமல் கடந்த ஆண்டும் நீலவேணியின் மகனும் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்தான். அவர்களின் நிலை உணர்ந்த காவல் ஆய்வாளர் வெங்கடசாமி, எஞ்சியுள்ள குழந்தைகள் நான்கு பேரையும் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...