இறந்துவிடுவேன் என நினைத்தேன்.. மோசமாக கொடுமைப்படுத்தினார்கள்.. கணவரை துணிச்சலுடன் மீட்ட மனைவி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் லட்சக்கணக்கில் பணம் கேட்டு கணவரை கடத்தி சென்ற கும்பலிடம் இருந்து அவரை பொலிஸ் உதவியுடன் மனைவி மீட்டுள்ளார்.

திருவண்ணாமலையை சேர்ந்த சரவணன் (44) கடந்த 28ஆம் திகதி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது.

பின்னர் சரவணன் மனைவி குணாவுக்கு போன் செய்த கும்பல், உன் கணவரை கடத்தி விட்டோம், ரூ 25 லட்சம் பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டியது.

பின்னர் தன்னிடம் ரூ 15 லட்சம் தான் இருக்கிறது என கூறிய குணா, சரவணணை விட்டுவிட கெஞ்சினார்.

பின்னர் குணாவை ஒரு இடத்துக்கு வரவழைத்து 15 லட்சத்தை வாங்கி கொண்ட கும்பல், சரவணனை செங்கம் பகுதியில் விட்டுவிடுவதாக கூறியது.

ஆனால் அவரை விடாத நிலையில் மீண்டும் குணாவுக்கு போன் செய்து மேலும் 10 லட்சம் கொடுக்க மிரட்டியது.

இது குறித்து குணா பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் குணாவிடம் 10 லட்சம் கொடுத்து கடத்தல் கும்பல் சொன்ன இடத்தில் நிற்க வைத்தனர்.

அங்கு கடத்தல் கும்பல் காரில் வந்த நிலையில் அதிலிருந்து இறங்கிய ஒருவரை பொலிசார் பிடித்தனர்.

மற்றவர்கள் தப்பித்த நிலையில் பொலிசார் துரத்தி சென்று பிடித்தனர். இதை தொடர்ந்து சரவணையும் மீட்டனர்.

கும்பலை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.

இது குறித்து சரவணன் கூறுகையில், என்னை காரிலேயே இரு நாட்கள் வைத்திருந்தார்கள். மது அருந்த மாட்டேன் என கூறியும் என்னை குடிக்க வைத்து அரை மயக்கத்தில் வைத்திருந்தார்கள்.

கண்டிப்பாக இறந்துவிடுவேன் என நினைத்தேன், ஏனெனில் அவர்கள் கொன்றுவிடுவார்கள் என தோன்றியது.

அதற்கு முன்பு நானே தப்பித்து லொறியில் விழுந்து இறந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை அந்த அளவுக்கு என்னை கொடுமைப்படுத்தினார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...