கோடீஸ்வர தொழிலதிபர் என்று கூறிய நபருடன் நட்பான விமானியின் மனைவி: அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவை சேர்ந்த விமானியின் மனைவி சமூகவலைதள செயலி மூலம் ஆண் ஒருவருடன் நட்பான நிலையில் அந்த நபராலேயே பணத்துக்காக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

புதுடெல்லியை சேர்ந்தவர் மீனு ஜெயின். இவர் இண்டிகோ விமானத்தை இயக்கும் விமானியின் மனைவியாவார்.

மீனுவுக்கு ஜெய்ப்பூரை சேர்ந்த தினேஷ் தீட்ஷிட் என்பவருடன் சமூகவலைதள செயலி மூலம் நட்பு ஏற்பட்டது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தினேஷ் தான் கோடீஸ்வர தொழிலதிபர் என மீனுவிடம் கூறியுள்ளார்.

பின்னர் டெல்லியில் உள்ள மீனு வீட்டில் அவரை தினேஷ் அவ்வபோது சந்தித்து வந்தார். இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக தினேஷ் பெரும் கடனாளியாக ஆனார்.

இதையடுத்து மீனுவிடம் அதிகளவில் பணம் மற்றும் வைர நகைகள் இருப்பதை அறிந்த தினேஷ் அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்.

அதன்படி போலியான நம்பர் ப்ளேட் ஒட்டிய காரில் சில தினங்களுக்கு முன்னர் மீனு வீட்டுக்கு தினேஷ் வந்தார்.

பின்னர் மீனுவுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவர் வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுக்க முயன்றார். ஆனால் மீனு மயக்கமடையாததால் அவருடன் சண்டை போட்டார்.

பின்னர் தலையணையால் மீனுவின் முகத்தில் அழுத்தி தினேஷ் கொலை செய்தார்.

இதை தொடர்ந்து ரூ 50 லட்சம் பணம், நகைகள், இரண்டு செல்போன்களை எடுத்து கொண்டு தப்பித்துள்ளார் தினேஷ்.

இதன்பின்னர் அங்கு மீனுவின் தந்தை மற்றும் சகோதரர் வந்த போது மீனு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் சிசிடிவி கமெரா பதிவுகளை ஆய்வு செய்த போது தினேஷ் அங்கு வந்தது தெரியவந்தது.

அவரின் கார் நம்பர் குறித்து விசாரித்ததில் அது போலி என தெரியவந்தது.

பின்னர் அவரின் சமூகவலைதள கணக்கு மற்றும் போன் நம்பர் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பொலிசார் தினேஷை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து தினேஷ் திருடிய பணம் மற்றும் இதர பொருட்களை கைப்பற்றிய பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...