இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பா? ரகசியமாக தங்கியிருந்த 3 இலங்கை நபர்கள் தமிழகத்தில் கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்தாரியின் நெருங்கிய நண்பர் ஹசன் என்பவர் சென்னை மண்ணடி பகுதியில் தங்கிருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலில் அடைப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டது.

தேசிய புலனாய்வு அமைப்பினரும், கியூ பிரிவு பொலிசாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டதில் சென்னை பூந்தமல்லியில் உள்ள கோல்டன் குடியிருப்பில் ரகசியமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இங்கு வந்து தங்கியிருப்பதன் காரணம் என்ன? என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர் விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும் கைது செய்யப்பட்ட 3 பேர் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்கு பொலிசார் மறுத்துவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்