திருமணத்துக்கு வந்த உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புதுமணத் தம்பதி... சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு புதுமன தம்பதிகள் வித்தியாசமாக வந்தவர்களுக்கு பரிசு கொடுத்து அனுப்பியதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அம்மையப்பன். ஜேசிபி ஓட்டுனரான இவருக்கும் சாந்திபிரியா என்பவருக்கும் அப்பகுதியில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் என்றாலே பட்டாசு, வெடி போன்றவை தான் இருக்கும், ஆனால் வழக்கத்திற்கு மாறாக திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புதுமண தம்பதியினர் மரக்கன்று கொடுத்து வரவேற்றனர்.

திருமணத்திற்காக தேவையில்லாத ஆடம்பரச் செலவு செய்பவர்களுக்கு மத்தியில் இயற்கை மீதான ஆர்வத்திலும், இயற்கையைப் பாதுகாக்கவும் விரும்பி மணமக்கள் எடுத்த இந்த முயற்சியை அங்கு வந்திருந்த உறவினர்கள் பாராட்டினர்.

அதுமட்டுமின்றி அவர்கள் உறவினர்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers