உன் புருஷன தூக்குறேன் பாரு... பொள்ளாச்சி வழக்கில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஆடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்திருக்கும் பார் நாகராஜின் பெயரை கூறிக்கொண்டு, இளம்பெண்ணுக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில், புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

அதில் சம்மந்தப்பட்ட பார் நாகராஜ் என்பவரின் பெயரை கூறிக்கொண்டு, குறிப்பிட்ட கோகிலா மற்றும் அவரின் கணவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு கொலை மிரட்டல் விடுக்கிறார். இந்த ஆடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆடியோவை கேட்க...

அந்த ஆடியோவில், பொள்ளாச்சி சம்பத் - கோகிலா மேல் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு. நீ எடுத்து வைத்திருக்கும் வீடியோவையும் டெலிட் செய் என மிரட்டுகிறார்.

அதற்கு அந்த பெண், நான் ஒன்னும் வீடியோ எடுக்கவில்லையே. கேஸ் வாபஸ் வாங்கவும் முடியாது என சொல்கிறார்.

உடனே அந்த நபர், உன்னுடைய புருஷன் திருச்சி வந்தாலும் சரி.., சென்னை வந்தாலும் சரி.., எங்கு வந்தாலுமே அவனை நான் தூக்குறேன் பாத்துக்கிட்டே இரு. முதலில் அவன் அப்புறம் உன்னை குடும்பத்தோடு தூக்குறேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார்.

அதற்கு அந்த பெண், உங்களால் முடிஞ்சதை நீங்க பாருங்க.. என்னால முடிஞ்சத நான் பாத்துக்கிறேன் என கூறுகிறார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது இந்த ஆடியோ வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...