100 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளேன்... உன்னால் என்ன முடியுமோ செய்துகொள்: தொழிலதிபர் கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் 100 பெண்களை சீரழித்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தின் காரணமாக, ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தனது பிறந்தநாள் என்று, அதற்கு விருந்து கொடுப்பதற்காக கல்லூரி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு காரில் அழைத்து சென்றார்.

காரில் அழைத்து செல்கையில் பலமுறை சில்மிஷம் செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், ஹொட்டலுக்கு அழைத்து சென்று பலமுறை ஒன்றாக இருந்தததில் மாணவி கர்ப்பமானதையடுத்து, காரில் வைத்து தாலிகட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.

பின்னர், அந்த மாணவியை அவரது நண்பர்களிடம் அனுசரித்து போக வேண்டும். அவர்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி வந்தார்.

இதனால் பயந்துபோன மாணவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், கல்லூரி மாணவியை தகாத வார்த்தையால் திட்டி, உன்னை போல் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளேன். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார்.

இதனால் கைது செய்யப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் பல பெண்களை மிரட்டி தவறாக நடத்திருக்ககூடும் என பொலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராதாகிருஷ்ணனின் செல்போனில் 600 எண்கள் சேமித்து வைத்திருந்ததாகவும், அதில் பாதி எண்கள், பெண்கள் தொடர்பு எண்கள் என்பது தெரியவந்தது.

ராதாகிருஷ்ணனால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர், இவரிடம் விவாகரத்து கோரி இவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers