நடிகர் ரித்தீஷ்ஷின் கடைசி நிமிடங்கள்: தண்ணீர் கேட்ட சில நொடியில் மயங்கினார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இறந்துபோன நடிகர் ரித்தீஷ்ஷின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர் JSK சதீஷ் அவரது கடைசி நிமிடங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

நேற்று தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தயாரிப்பாளரும், ரித்தீஷ்ஷின் நண்பருமான சதீஷ் கூறியதாவது, சாப்பிட்டு முடித்து அமர்ந்துகொண்டிருந்த ரித்தீஷ் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கேட்டார்.

ஆனால், தண்ணீர் கேட்ட சிறிது நொடியில் மயங்கி விழுந்த அவர், அவரது இல்லத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கடவுள் துணை நிற்கட்டும் என கூறியுள்ளார்.

ரித்தீஷ் மயங்கி விழுந்த பின்னர்கூட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், அவருக்கு நாடித்துடிப்பு இருப்பதாக கூறி மீண்டும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் வீட்டிலேயே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்