தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த 4 வடமாநில இளைஞர்கள்.... சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கியதில் நான்கு வடமாநில இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சாய ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வட மாநில இளைஞர்கள் மற்றும் தமிழர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால், ஆலையின் கழிநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் வடமாநில இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது கழிநீர் தொட்டியிலிருந்து வெளிவந்த விஷவாயு தாக்கியதில் 4 வடமாநில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் 4 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில்வார் உசேன், ஃபரூக் அகமது, அன்வர் உசேன் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்