சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரேமலதா நடித்திருக்கலாம்..!

Report Print Abisha in இந்தியா

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக பிரேமலதா நடித்திருக்கலாம் என அமமுக துணைபொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆரணி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக செந்தமிழன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பிராச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய தினகரன், “டிடிவி தினகரன் கட்சிக்கு வாக்களித்தால் ராகுல் காந்தி பிரதமராகாமல் மீண்டும் மோடி பிரதமராகிவிடுவார் என பிரச்சாரம் செய்யப்படுகின்றது. மோடி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

நேற்று வரை ஜெயலலிதாவை எதிராக நினைத்த பிரேமலதா, இப்போது தன்னை ஜெயலலிதாவாக மக்கள் பாவிக்க நினைத்து விட்டார்கள் பெருமையாக பேசிவருவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரேமலதா நடித்திருந்தால் இன்னும் சூப்பராக தியேட்டர்களில் ஓடியிருக்கும் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்