அனாதையாக கிடந்த சூட்கேஸ்.... உள்ளே இருந்த இளம் பெண்ணின் சடலம்.... திடுக்கிடும் பின்னணி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இளம்பெண் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அவர் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள மெட்சல் பகுதியில் இருக்கும் கிரிஷி தனியார் பள்ளிக்கூடம் அருகில் சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சூட்கேஷை சோதனை செய்தனர்.

அப்போது உள்ளே இளம் பெண்ணின் சடலம் இருந்தது.

இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சூட்கேசில் சடலமாக கிடந்த பெண்ணின் பெயர் லாவண்யா (25) என்பதும் அவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய முழு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. லாவண்யாவும், சுனில் திலீப் (25) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுனிலிடம் லாவண்யா கூறினார்.

அப்போது லாவண்யா மற்றும் அவர் குடும்பத்தாரை சந்தித்த சுனில், எனக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்துள்ளது.

என்னுடன் லாவண்யாவை அனுப்பினால் அவளுக்கு அங்கு வேலை வாங்கி தருவேன் என கூறினார்.

இதை நம்பிய லாவண்யா குடும்பத்தார், சுனிலுடன் அவரை அனுப்ப முடிவு செய்து கடந்த 4ஆம் திகதி விமான நிலையம் வந்தனர்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து லாவண்யா குடும்பத்தார் கிளம்பிய நிலையில், விமானத்தில் ஏறாத சுனில் ஹைதராபத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து லாவண்யாவுடன் தங்கினார். பின்னர் லாவண்யாவை கழுத்தை நெரித்து கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து பள்ளி அருகில் போட்டுள்ளார்.

இந்நிலையில் லாவண்யா மஸ்கட்டில் இருப்பதாக நினைத்த அவர் குடும்பத்தார் அவர் வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பிய நிலையில் அந்த எண்ணிலிருந்து லாவண்யா போல சுனில் மெசேஜ் அனுப்பினார்.

பின்னர் கடந்த 7ஆம் திகதி போன் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த லாவண்யா குடும்பத்தினர் பொலிசில் புகார் கொடுத்தனர்.

பொலிசார், சுனில் ஹைதராபாத்தில் தான் இருப்பார் என சந்தேகப்பட்டு அவரை தேடி நிலையில் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் லாவண்யாவை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அவரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்