கணவரை தோளில் தூக்கி சுமந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் நடந்த புதுப்பெண்... ஏதற்காக? அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் வேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்தார் என கூறி இளம் பெண்ணுக்கு ஊர் மக்கள் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள தேவிகர் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண், இளைஞர் ஒருவரை சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண் வேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால் கிராமத்தை சேர்ந்த மக்கள் கோபமடைந்தனர்.

இதற்கு தண்டனையாக தனது கணவரை தோளில் தூக்கி கொண்டு அப்பெண் நடக்க வேண்டும் என மக்கள் கூறினார்கள்.

இதையடுத்து தனது கணவரை தோளில் தூக்கி கொண்டு, பாரத்தை சுமக்க முடியாமல் நடந்தார் அந்த இளம்பெண்.

சுட்டெரிக்கும் வெயிலில் அவர் கணவரை சுமந்து சென்ற நிலையில் அவரை சுற்றி 10க்கும் மேற்பட்ட நபர்கள் ஆடிபாடி கத்தி கொண்டு உடன் வந்தனர்.

பாரம் தாங்காமல் கீழே விழுந்து விடுவோம் என பயந்த அப்பெண் ஒரு நிமிடம் நின்றார், ஆனால் அவரை நிற்கவிடாமல் அங்கிருந்தவர்கள் மீண்டும் நடக்கும்படி மிரட்டினார்கள்.

இது சம்மந்தமான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக பொலிசார் இதுவரை இருவரை கைது செய்துள்ளனர்.

பெண்ணை மரியாதை இல்லாமல் நடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்