பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் உறுதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சபரி, சதிஷ் மற்றும் வசந்தக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் சரியா அல்லது தவறா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நால்வரிடமும் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers