வாழ்க்கையிலேயே மோசமான நாள்: அப்படியே ஷாக் ஆன அப்பல்லோ ரெட்டி மகள்

Report Print Arbin Arbin in இந்தியா

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தையும் கேன்சல் செய்துவிட்டு, ஓட்டுப்போட ஆசை ஆசையாக வந்தால், வாக்காளர் பட்டியலில் பேரே இல்லை என கொதித்து போய் கேள்வி எழுப்பியுள்ளார் அப்போலோ மருத்துவமனை தலைவரின் மகள் ஷோபனா.

நாடு முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலையிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்து வருகிறது.

இத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

இன்று வாக்குபதிவு என்பதால் ஆந்திராவில் உள்ள அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா வந்திருந்தார்.

இவர் ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தவர். வாக்களிப்பதற்காக அதனை ரத்து செய்துவிட்டு வெளிநாட்டிலிருந்து வந்துள்ளார்.

அதன்படி வாக்குபதிவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே வாக்குச்சாவடிக்கு ஷோபனா சென்றுள்ளார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பெயர் இல்லாததல் ஓட்டு போடவும் முடியாது என்று மறுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த ஷோபனா,

என் வாழ்க்கையியே இன்றைய நாள் மோசமான நாள். ஒரு இந்திய குடிமகளாக நான் ஏமாற்றப்பட்டு உள்ளேன்.

நான் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன். ஆனால் என் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது என கொந்தளித்துள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers