எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க... யாரும் தீர்வை நோக்கி நகரவேயில்லை – நடிகர் சேரன் வேதனை

Report Print Abisha in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் தலைவர்களின் பிரச்சாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சேரன் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் பிரச்சாரம் ஏப்ரல் 16-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதற்காக தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தங்களுடைய பிரச்சாரத்தில் தலைவர்கள் பலரும் தற்போதுள்ள பிரச்சனைகள் பற்றி பேசி வருகிறார்கள்.

இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க.. யாரும் தீர்வை நோக்கி நகரவேயில்லை... பிரச்னைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை.. ஆனால் வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும்.. யாரை நம்பி மாற்றம் தேடுவது... சாதாரண வாக்காளனாய் எனக்கு தோன்றியது..' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers