இந்தியாவின் முக்கிய தலைவரை லேசர் குண்டு மூலம் கொல்ல சதி: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மனுதாக்கலின்போது ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக அவர் 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ ஒன்றும் மேற்கொண்டார்.

குறித்த ரோடு ஷோவில் அவரது சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அவர்களது மகன் ரேகன், மகள் மரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே ராகுல் நடத்திய அந்த ரோடு ஷோவில் அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து மத்திய உள்விவகார அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன.

மேலும், அமேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.

ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன.

7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது. நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த வி‌டயத்தில் மத்திய உள்விவகார அமைச்சகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. காங்கிரசின் இந்த புகார் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers