ரஜினிக்கு தலைக்கு மேலும் ஒன்றும் இல்லை, தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை - சீமான் தாக்கு

Report Print Abisha in இந்தியா

நாடாளுமன்ற நாகை தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகை நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரைஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சீமான் பேசினார்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் பாரட்டியது குறித்து தெரிவித்த அவர், ரஜினி எப்போதும் நடிகர் என்றும் மோடி அவருக்கு இயக்குநர் என்றும் தெரிவித்தார்.

மேலும், ரஜினிக்கு தலைக்கு மேலும் ஒன்றும் இல்லை, தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers