அத்தை மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி பிரகதி: பொள்ளாச்சியில் உண்மைகள் மறைந்திருப்பதாக அண்ணன் தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சியில் கடந்த வாரம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி பிரகதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எனது தங்கையின் இறப்பில் பல உண்மைகள் மறைந்திருக்கிறது என அண்ணன் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் விடுமுறையை முன்னிட்டு தனது கல்லூரி விடுதியில் இருந்து வீட்டுக்கு சென்றபோது, தனது மாமா சதீஷ்குமாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பிரகதியின் கொலையில் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கொலை முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், பிரகதியின் அண்ணன் அரவிந்த் கூறியதாவது, ராமநாயக்கன் புதூரில் இருக்கற மயானத்துல தான் என் தங்கச்சி பிரகதியை அடக்கம் செய்துள்ளோம்.

இந்த கொலை சம்பவத்தில் பொலிசார் சொல்வதை நம்பமுடியவில்லை. எஸ்.பி.யா இருந்த பாண்டியராஜன்தான் பொய் சொன்னாருன்னா இப்போது நியமிக்கப்பட்டுள்ள பொலிசாரும் பொய் சொல்றாங்க.

இருப்பினும் எனது தங்கையின் கொலைக்கு நியாயம் கேட்டு போராடுவோம்.பொள்ளாச்சியில் நிறைய உண்மைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers