தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்: நடிகை கஸ்தூரி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சி என்ற கருத்து கண்டிப்பாக மக்களவை தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, காங்கிரஸ் பல மாநிலங்களில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம்.

மத்தியில் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்பில்லை.

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்ராஜ்சத்யன் எனது நண்பர். அவரது செயல்பாடுகள் எனக்கு நன்கு தெரியும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மதுரைக்கு உறுதியாக நல்ல பல திட்டங்களைக் கொண்டு வருவார்.

நாம் தமிழர் கட்சிதான் 40 தொகுதிகளில் 20 தொகுதியை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுகவில்கூட 2 பெண்கள் மட்டுமே, அதுவும் வாரிசுகள்தான் நிறுத்தப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்