திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தை மகனால் புதருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி: நீதிமன்றம் உத்தரவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு 15 நாட்கள் காவல் சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவி பிரகதி பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொலையை செய்த பிரகதியின் அத்தை மகன் சதீஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுவயதில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், எனக்கு திருமணமாகிவிட்ட போதிலும் காதல் தொடர்ந்த நிலையில், பிரகதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

மேலும், பிரகதிக்கு தேவையான பணம் மற்றும் நகை உதவிகள் அவ்வப்போது செய்துவந்தேன், இந்நிலையில் தான் எனக்கு அவள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் அவளை கொலை செய்துவிட்டேன் என கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் கைது சதீஷ்குமாரை 15 நாள் காவலில் கோவை சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்