உன்னை நம்பித்தானே வந்தேன்... தயவுசெய்து என்னை விட்டுவிடு: கதறிய மாணவிக்கு நடந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 ஆம் வகுப்பு படித்து வந்த ரம்யா என்ற மாணவி, அதே பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற கல்லூரி மாணவனுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியதையடுத்து இந்த காதல் விவகாரம் ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து எச்சரித்துள்ளனர்.

இதனால் நரேஷுடன் பழகுவதை ரம்யா தவிர்த்துள்ளார். ரம்யா தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் கோபம் அடைந்த நரேஷ், நாம் நட்பாக பழகலாம் என கூறியிருக்கிறார். இதற்கு ரம்யாவும் சம்மதம் தெரிவித்ததையடுத்து இருவரும் அவ்வப்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

கஞ்சா, குடி போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்த நரேஷ், ரம்யாவைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.

இதனால், சம்பவம் நடைபெற்ற அன்று ரம்யாவிடம் சென்று, உன்னை பிரிந்துவிட்டது எனக்கு மனவேதனையாக இருக்கிறது, உன்னுடன் சில நிமிடங்கள் பேசினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய ரம்யாவும், நரேஷுடன் பைக்கில் சென்றுள்ளார். ரம்யாவை தனது நண்பர் ராஜாவின் அறைக்கு அழைத்து சென்ற நரேஷ், நான் உன்னை மறக்க வேண்டுமென்றால் என்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரம்யா, என்னை நம்பித்தானே வந்தேன்... தயவுசெய்து என்னை விட்டுவிடு என கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.

ஆனால், சிறுமி இப்படி கெஞ்சிக்கொண்டிருக்கையிலேயே வீட்டுக்குள் நுழைந்த ஏனைய இரண்டு நண்பர்கள், ரம்யாவின் வாயில் துணியை வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில் டியூசனுக்கு சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பாததையடுத்து பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் நரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து அவனை கைது செய்து பொலிசார் நடத்திய விசாரணையில், அவன் நடந்தவற்றை கூறியதை கேட்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நரேஷ், சூரி ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers