தேர்தல் தினத்தன்று மை விரலுடன் செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு!

Report Print Arbin Arbin in இந்தியா

முதன் முறை வாக்காளர்கள் கைவிரலில் மையுடன் செல்பி எடுத்து அனுப்பினால், முதல் பரிசாக ரூ.7000 வழங்கப்படும் என்று இந்தியாவில் மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது.

பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியான மிசோரமில் மொத்தம் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த முறை மிகக்குறைவான அளவில் வாக்குப்பதிவு நடந்ததால், வரும் தேர்தலில் அதனை அதிகரிக்க தேர்தல் துறை திட்டமிட்டது.

அதன்படி, தேர்தல் நாளான 11 ஆம் திகதி முதன் முறை வாக்காளர்கள் கைவிரலில் வாக்களித்த மையுடன் செல்பி எடுத்து, அதனை #mizoramelections என்ற ஹேஷ்டேக் உடன் இன்ஸ்டாகிராமில் பகிர வேண்டும்.

அல்லது, தேர்தல் ஆணையத்தின் வாட்ஸ் அப் நம்பருக்கு செல்பியை அனுப்ப வேண்டும். தேர்வாகும் முதல் செல்பிக்கு ரூ.7000 பரிசாகவும்,

இரண்டாம் மற்றும் மூன்றாம் செல்பிக்கு முறையே ரூ.3000 மற்றும் ரூ.2000 பரிசாகவும் வழங்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்