நாடாளுமன்ற தேர்தலும் சர்ச்சை பேச்சுக்களும்

Report Print Abisha in இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் துவங்கியது முதல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பின் முன்முனைப்பில் எதிர்கட்சிகள் மீது சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிவருகின்றனர். மேலும், சிலர் தங்கள் கட்சிகள் மீதே சில சர்ச்சைகருத்துகளை பதிய வைத்துள்ளனர். அவ்வாறு அவர்கள் தெரிவித்த சர்ச்சை கருத்துகளில் சிலவற்றை

பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் மிக, மிக அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், அவர்களது ஓட்டுக்களை நம்பித்தான் ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளார் என்றார். இதை பிரதமர் மோடி கடந்த 1-ந்தேதி வெளியிட்டிருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

நீலகிரியில் பிரச்சாரம் செய்த தமிழக முதலமைச்சர், தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டினார்.

மேலும், கலைஞருக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும் எனவும் அறிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் இருக்கப்போவது நாம் தான். மேலும், இதற்குமேல் தெளிவாக உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. எதிரணிக்கு இது தெரியாது. நாம ஜெயிச்சிட்டோம் என்று தெரிவித்தார். இது வாக்கு சாவடிகளை கைப்பற்றும் நோக்கி கூறியது என்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரேமலதா விஜயகாந்து

பெண்களின், தாய்குலங்களின் வாழ்க்கையை காக்கக் கூடிய கூட்டணி இந்த அ.தி.மு.க கூட்டணி. நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும், என்று பேசியது மிகபெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழச்சி ஒருஅழகான வேட்பாளர் என்று குறிப்பிட்டார் இது பெரிய அளவில் விவாதமாக மாறியது. பெண்ணியலாளர்கள் இதை பெரிய விஷயமாக விவதித்து வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத்

உத்திரபிரதேஷ மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி குறித்து பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு ‘வைரஸ்’ என குறிப்பிட்டார்.

சுப்பிரமணிய சாமி

பாஜகவில் சவுக்கிதார் (காவலாளி) என்று உருவாக்கப்பட்டுள்ள அடைமொழி குறித்து. நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது. பிராமணர்கள் காவலாளிகளாக முடியாது. இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் பணியாகும், என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்