மருமகன்களுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்... 18 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான உண்மை...திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் பெற்ற மகனை மருமகன்கள் உள்ளிட்ட மூவருடன் சேர்ந்து தாய் கொலை செய்த சம்பவம் 18 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் மசூதா பீ. இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில் ஏழு பேருக்கு திருமணமான நிலையில் இரண்டாவது மகனான முகமது காஜாவுக்கு மட்டும் திருமணமாகவில்லை.

ஏனெனில் அவர் மது, சூதாட்டம் உள்ளிட்ட கெட்டப்பழக்கத்துக்கு அடிமையானதோடு வேலைக்கும் செல்லாமல் ஊதாரிதனமாக சுற்றி வந்தார்.

இதோடு தனது தாய் மசூதாவிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டு வந்தார்.

மகனின் கொடுமைகளை பொறுத்து கொள்ள முடியாமல் தவித்த வந்த மசூதா தனது மருமகன்கள் ரஷீத், பஷீர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஹாஷம் ஆகியோர் உதவியுடன் கடந்த 2001ம் ஆண்டு, ஜூன் 5ம் திகதி காஜாவை கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் இவ்வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது.

இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ள பொலிசார் தலைமறைவாக இருக்கும் மசூதாவை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers