பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயத்திற்கு முக்கிய அறிவிப்புகள்

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில் இந்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள்
 • விவசாயிகளுக்கு 5ஆண்டுகளுக்கு வட்டியில்ல கடன் வழங்கப்படும்
 • 60வயதிற்கு மேற்பட்டசிறுகுறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்
 • அனைத்து மாநிலங்களையும் ஆலோசித்து ஜி.எஸ்.டி நடைமுறைகள் பின்பற்றப்படும்
 • 2022 ஆம் ஆண்டுகுள்அனைத்து வீடு இல்லாதோர்க்கு வீடு கட்டித்தரப்படும்
 • முத்தலாக் தடைசட்டம் நிறைவேற்றப்படும்
 • மதநல்லிணக்கம்காப்பாற்ற அரசியல் சட்டரீதியாக நடிவடிக்கை மேற்கொள்ளப்படும்
 • அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட அனைத்து வழிவகைகளும் ஆராய்ந்து விரைவுபடுத்தப்படும்
 • நாடு முழுவதும்75 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்
 • நாடாளுமன்றம் மற்றும் சட்டபேரவையில் பெண்களுக்கு 33சதவிகிதம் இட ஒதிக்கீடு வழங்கப்படும்
 • பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும்
 • நதிகள் இணைப்பிற்குபுதிய ஆணையம் உருவாக்கப்படும்
 • சிறு வணிகர்களுக்காக தேசிய வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கப்படும்
 • சில்லறை வர்த்தகத்திற்கான தேசிய கொள்கை வகுக்கப்படும்
 • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும்
 • தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிராக, துளிகூட சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்