40 வாக்காளர்களை கொண்ட தமிழக வீடு: அந்த வீட்டில் மொத்தம் 60பேராம்…!

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில் ஓசூரில் 40 வாக்காளர்களை கொண்ட வீட்டில் மொத்த ஓட்டையும் அள்ள அனைத்து கட்சிகளும் முண்டியடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 80 குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 60 பேர் உள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த 60 பேரும் ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர்.இவர்களில் 40பேருக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்களின் ஓட்டை அள்ள அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றனர். இதில் எந்த கட்சி என்று பாகுபாடு இல்லாமல் ஓட்டு கேட்டு வருகின்றனர் என்ற அந்த குடும்பத்து நபர் தெரிவித்துள்ளார்.

இதில் பலர் வெளியூர்களில் இருந்தாலும் அனைவரும் வாக்களிக்க ஊருக்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த குடும்பம் நான்கு தலைமுறையாக தொடர்ந்து அண்ணன் தம்பி என்று அனைவரும் இணைந்து இருப்பதால் இத்தனைபேர் உள்ளனர் என்றும் என்கிறார் குடும்ப உறுப்பினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்