180 நாட்களில் கசந்த மணவாழ்க்கை.... வேதனையில் பெண் எடுத்த சோக முடிவு

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக விக்னேஷ்வரி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலே, உறவினர்களுடன் பேச கூடாது என்றும் பண்டிகை காலங்களில் பணம் நகை கேட்டும் மாரியப்பன் தொடர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த விக்னேஷ்வரி வீட்டில் ஆளில்லாத சமயம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் விக்னேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் விக்னேஷ்வரி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி மாரியப்பனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers