300 தீவிரவாதிகள் உயிரிழப்பு: விமானி அபிநந்தனின் தந்தை வெளியிட்ட முக்கிய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்திய எல்லை பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என விமானி அபிநந்தனின் தந்தை கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு மீண்டு வந்த விமானி அபிநந்தனின் தந்தை சிம்மகுட்டி வர்தமான் சென்னை IITயில் பாதுகாப்பு பிரிவில் பயிலும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், பாலகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முஹம்மது தீவிரவாத நிலைகள் மீது இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் .

ஏனெனில், லேசர் உதவியுடன் செலுத்தக்கூடிய ஸ்மார்ட் குண்டுகளை (SPICE - 2000) இந்திய விமானப்படை பயன்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த குண்டுவீச்சால் கட்டுமானப் பொருட்கள் சிறிதாக இருந்தாலும், உயிர்சேதம் பெரியளவில் இருக்கும்.

பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முஹம்மது இயக்கத்தின் தலைமையகத்தை தாக்கும் முனைப்புடன் 7 போர் விமானங்களை இந்தியா அனுப்பியது, இதனை எதிர்கொள்ள F-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் அனுப்பியது.

இந்தியா பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் நம்பியது என்றாலும் அவர்களது பகுதிக்குள் நுழைந்து இந்த தாக்குதல் நடத்தப்படும் என அவர்கள் அறிந்திருக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers