என் சகோதரன் தைரியமானவன்: ராகுல்காந்தி குறித்து பிரியங்கா காந்தியின் ட்வீட்

Report Print Kabilan in இந்தியா

தனது சகோதரர் தைரியமானவன் என ராகுல்காந்தி குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முழுநேர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது அவருடன் சகோதரி பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். இந்நிலையில், பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘என் சகோதரர், என்னுடைய நம்பிக்கைக்குரிய தோழன், எல்லாவற்றையும் விட மிகுந்த தைரியமானவன். வயநாடு அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளட்டும். அவர் உங்களை எப்போதும் கைவிட மாட்டார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers