மதுபோதையில் தவறி விழுந்ததாகக் கூறப்பட்ட இளைஞர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட இளைஞர், பொலிசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் மகேஷ். டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்த இவர், சாம் சித்திரவேல் என்பவரின் காதல் வெற்றி கொண்டாட்டத்திற்காக, தண்ணீர் தொட்டி மீது நடைபெற்ற மது விருந்தில் பங்கேற்றார்.

8 பேருடன் விருந்தில் கலந்துகொண்ட மகேஷ் மது அருந்தியுள்ளார். விருந்திற்கு பின்னர் மகேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் மகேஷின் வீட்டார் அவர் காணாமல் போனதாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தேடுதல் நடத்திய பொலிசார், குடிபோதையில் தவறி விழுந்ததாக கருதி மகேஷின் உடலை மீட்டனர். அதன் பின்னர் பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் மகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

சம்பவத்தன்று மகேஷ் தனது கைப்பேசியில் ஏதோ வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். அப்போது மற்றொரு 17 வயது இளைஞர் அதை எட்டி பார்க்க, இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் குறித்த இளைஞர் மகேஷை தாக்கி கீழே தள்ளியதில் அவர் உயிரிழந்துள்ளார். மதுபோதையில் அனைவரும் மகேஷை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர் என்பது பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பொலிசார் குறித்த 17 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers