எதற்கும் பயப்படாதவர் எங்கள் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான்: அனல் பறக்கும் சீமான் பிரசாரம்

Report Print Raju Raju in இந்தியா

எந்த விடயத்துக்கும் பயப்படாத நடிகர் மன்சூர் அலிகானை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் சீமான்.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இத்தனை வருடமாக மத்தியில் காங்கிரஸ், இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

இங்கே திமுக, அதிமுக என இதையெல்லாம் நாம் பார்த்துவிட்டோம். ஆனால் அந்த கட்சிகளும் நமக்கு ஒன்றும் செய்தது கிடையாது, பிறகு எதற்கு அவர்களுக்கு திரும்பவும் வாய்ப்பு?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்தை அரசு தொழிலாக்குவோம். 58 வயதான விவசாயிக்கு ஓய்வூதியம் கொடுப்போம்.

இன்று சினிமாவில இருப்பவர்களில் மக்களுக்காக போராடி சிறைக்கு சென்றது மன்சூர் அலிகான் தான். அவர் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது.

எதற்கும் பயப்படாத அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என பேசினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers