ரஜினிகாந்த் என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்தால் மகிழ்ச்சிதான்: கமல்ஹாசன்

Report Print Kabilan in இந்தியா

என்னை ஆதரித்து ரஜினி பிரச்சாரம் செய்தால் சந்தோஷம் தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தும் வாய்ப்பு கிடைக்கிறது. எங்களுடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் தினமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன்.

தேர்தல் பறக்கும் படையினர் பணம் பிடிபடும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதைப் பார்க்கும் எங்கள் வேட்பாளர்களும், நாமும் இப்படி செலவு செய்ய வேண்டும் என அடையாளம் காட்டுகிறார்கள்.

அவர்களுக்கு கனிவாக சொல்லுகிறேன். இதை செய்யக் கூடாது. அப்படி என் கட்சியினர் யாராவது செய்தால் அவர்களை தேர்தல் ஆணையத்தில் நானே காட்டி கொடுப்பேன்.

சேஷன் மாதிரி இருந்தவர்கள் இயக்கிய தேர்தல் ஆணையர், இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாக கூறினார்.

எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது. எனக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்வாரா என்று தெரியாது. பிரச்சாரம் செய்தால் சந்தோஷம் தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers