கிளீன் இந்தியா என்றால் இவர்களை அகற்றுவதுதான்- சீமான் தாக்கு

Report Print Abisha in இந்தியா

நாட்டில் உள்ள எல்லா குப்பைகளையும் அள்ளிடீங்களா..? முதலில் நீங்கள்தான் பெரிய குப்பை என்று நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் மன்சூர்அலிகானை ஆதரித்து நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஸ்வெட்ச்பாரத் என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள மொத்த குப்பைகளையும் சுத்தம் செய்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அதற்கு அவரே பதிலளிக்கையில், நீங்கள்நான் நாட்டில் உள்ள மிகப்பெரிய குப்பை உங்களை அகற்றுவதுதான் உண்மையான கிளீன் இந்திய என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கிளீன் இந்திய என்றால் அதன் பொருள் ஆறு, ஏரி, குளம், எல்லாம் விற்பதுதான் என்று பிரதமர் மோடியின்திட்டம் குறித்து விமர்சித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers