சொந்த சகோதரரின் மனைவியை கோடாரியால் அடித்து கொன்ற நபர்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சொந்த சகோதரரின் மனைவியை நபர் ஒருவர் கோடாரியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ். இவரின் மனைவி சிம்ரன் (38). ராஜூடன் அவர் சகோதரர் சல்மான் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று சல்மானுக்கும், அவரின் சகோதரர் மனைவி சிம்ரனுக்கும் இடையில் குடும்பம் விடயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதமானது சண்டையாக மாறிய நிலையில் ஆத்திரமடைந்த சல்மான் வீட்டில் இருந்த கோடாரியால் சிம்ரனை அடித்து கொலை செய்தார். பின்னர் வீட்டிலிருந்து தப்பியோடி விட்டார்.

இது தொடர்பாக தனது சகோதரர் சல்மான் மீது ராஜ் பொலிசில் புகார் அளித்தார்.

புகாரை பெற்று கொண்ட பொலிசார் தலைமறைவாக உள்ள சல்மானை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்