கேரளாவில் ராகுல்காந்தியை எதிர்த்து விவாத பெண்மணி போட்டி

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடப் போவதாக சோலார் மோசடி புகழ் சரிதாநாயர் அறிவித்துள்ளார்.

கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது.

இதில் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் மீது இந்த மோசடி புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற தனக்கு உதவி செய்வதாக கூறி அப்போது முதலமைச்சராக இருந்த உம்மன்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ. ஹிபிஈடன் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறினார்.

தொடர்ந்து கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்தது.

ஹிபிஈடன் உள்பட மேலும் பலர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எர்ணாகுளம் தொகுதியில் ஹிபிஈடன் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதற்கு சரிதாநாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எர்ணாகுளம் தொகுதியில் ஹிபிஈடனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்த அவர் அந்த தொகுதியில் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்தும் போட்டியிடப் போவதாக சரிதாநாயர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers