100 கிலோ தங்கத்தை கைப்பற்றிய பறக்கும் படை! தமிழகத்தில் பரபரப்பு

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், 100 கிலோ தங்கம் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி, பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த வாகனம் ஒன்றில், 100 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டது சோதனையில் தெரிய வந்தது.

தங்கத்திற்கான உரிய ஆவணங்கள் அதனை கொண்டு வந்தவர்களிடம் இல்லாததால், அதிகாரிகள் உடனடியாக 100 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தங்கத்தை கொண்டு வந்தவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...