கழிவறையில் கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம்: கையும் களவுமாக சிக்கிய இளைஞர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கல்லூரி மாணவியான நீது(22) என்பவரே கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொல்லப்பட்டவர். சம்பவத்தின் போது நீதுவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடியுள்ளனர்.

இந்த நிலையில் நீதுவின் குடியிருப்பில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிதீஷ்(32) என்பவரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

பகல் 7 மணி அளவில் கழிவறையில் சென்ற நீதுவை திட்டமிட்டு, குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த நிதீஷ் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இருச்சக்கரவாகனத்தில் நீதுவின் குடியிருப்புக்கு வந்த நிதீஷ், பின் வாசல் வழியாக குடியிருப்புக்குள் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

திடீரென்று நீதுவின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அவரது குடியிருப்பின் அருகே ஒன்று கூடியுள்ளனர்.

இதனிடையே கழிவறையில் இருந்து நீதுவின் உடல் முழுவதும் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி நீதுவின் மார்பில் ரத்தக்காயம் இருந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த பொலிசார் நிதீஷை கைது செய்துள்ளனர். மட்டுமின்றி மருத்துவ சோதனைக்கு உட்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து விசாரணைக்கும் உட்படுத்தப்படுவார். எம்.பி.ஏ பட்டதாரியான நிதீஷ் கடந்த மூன்று ஆண்டுகளாக நீதுவை காதலித்து வந்துள்ளார்.

பலமுறை திருமணம் செய்துகொள்ள கோரியும் நீது மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து சென்ற நிதீஷ், மீண்டும் திருமண கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆனால் நீது தமது குடும்ப நிலையை கருத்தில்கொண்டு மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட நீதுவின் தாயார் சில ஆண்டுகளுக்கு முன்னரே மரணமடைந்துள்ளார். தந்தையும் கைவிட்டு சென்றுள்ளார்.

கல்லூரியில் படித்துவரும் நீது பாட்டி உள்ளிட்ட உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...