8 ஆண்டுகளுக்கு பின் பேஸ்புக் உதவியால் தாயிடம் சேர்ந்த மகன்! நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு 8 வயதான தனது மகன் தினேஷ் ஜனா காணாமல் போனதாக, சுசானா குஷாய்குடா என்ற பெண் பொலிசில் புகார் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பொலிசார் அந்த சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், சுசானா தனது பேஸ்புக் கணக்கில் மகன் தினேஷ் ஜனாவை பல பெயர்களைக் கொண்டு தேடியுள்ளார்.

அப்போது தனது மகனின் புகைப்படத்தை பார்த்த அவர், அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக சைபர் பிரிவு பொலிசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தினேஷின் பேஸ்புக் கணக்கின் ஐ.பி எண்ணைக் கொண்டு, பஞ்சாப்பின் அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள ரனகலா கிராமத்தில் சுசானாவின் மகன் வசிப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பொலிசார் ஒரு குழுவாக பஞ்சாப் சென்று தினேஷை மீட்டு வந்தனர். பின்னர் நேற்றைய தினம் சுசானாவிடம் அவரது மகன் தினேஷ் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers