என் முகத்தில் ஆசிட் வீசிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சென்றேன்: கண்ணீர்விட்டு அழுத நடிகை

Report Print Abisha in இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா பிரச்சார மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.

மேடையில் பேசிய அவர், தாம் ராம்புரை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும்,ஆனால் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம் கான் குண்டர்களை ஏவி தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார்.

மேலும், தமது முகத்தில் ஆசிட் வீசிவிடுவார்கள் என்ற அச்சத்தால்தான் ராம்புரை விட்டுச் சென்றதாக கூறினார்.

தொடர்ந்து தமது 67வது பிறந்தநாள் பரிசாக இந்தத் தொகுதியில் தமக்குப் போட்டியிட வாய்ப்பளித்த பாரதிய ஜனதாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

முன்னதாக, 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜெயப்பிரதா, இம்முறை சமாஜ்வாதி வேட்பாளரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...