எங்களை இலங்கைக்கு அனுப்புங்கள்... சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்கள்.. பரிதாப பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள 11 இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய, தண்டனை பெற்ற இலங்கை தமிழர்கள், வெளிநாட்டினர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்களான தயானந்தன், ராபின் பிரசாத், சாந்தரூபன், சத்தியசீலன், தயாகரன், கோபிநாத், குருவிந்தன், சுதர்சன், பிரபாகரன், ரமேஷ், தர்சன் ஆகிய 11 பேர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்பும் அவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை தமிழர்கள் 11 பேரும் தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரியும், தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரியும் நேற்று காலை 10.30 மணி முதல் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை.

இலங்கை தமிழர்களின் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...