கோபத்தில் குஷ்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியில் தனக்கு சீட் கொடுக்காத காரணத்தால் குஷ்பு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார், ஆனால் அது திருநாவுக்கரசுக்கு ஒக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பிரசாரம் செய்யவுள்ள காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், குஷ்பு பெயரை 29வதாக சேர்த்துள்ளனர். சமீபத்தில் சேர்ந்த திருநங்கை அப்சராவிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

இதனால் காங்கிரஸ் மேலிடம் மீது கோபத்தில் இருக்கும் குஷ்பு, பிரச்சாரம் செய்வதை தவிர்த்து வருகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் தனக்கு படப்பிடிப்பு இருப்பதாக கூறி பிரச்சாரத்தை தவிர்த்து வருகிறார்.

இத்தகவல் காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குஷ்பு பிரச்சாரம் செய்யவில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்