பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் சரணடைந்த மணிவண்ணன்.... நீதிமன்றம் அளித்த உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணன் என்பவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில் நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது சம்மந்தமாக புகார் கொடுத்த நிலையிலேயே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த பெண்ணின் சகோதரரை மணிவண்ணன் என்பவர் தாக்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி மணிவண்ணன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.

இன்று மீண்டும் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.

ஆனால் அவரை நீதிமன்றம் அவரை 3 நாட்கள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்