பிரதமர் மோடி-முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிக மோசமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

Report Print Kabilan in இந்தியா

தயாநிதி மாறனுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை மிக மோசமாக விமர்சித்தார்.

தி.மு.க கட்சி வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் ஆகியோரை மிக மோசமாக விமர்சித்து பேசினார்.

குறிப்பாக, அன்புமணி ராமதாஸ் முன்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்ததை நினைவுகூர்ந்த அவர், எப்படி அவரிடம் இவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, புல்வாமா தாக்குதல் ஆகியவற்றை குறிப்பிட்டு அவரது ஆட்சி மோசமானது எனக் கூறினார்.

இது குறித்த வீடியோ கீழே

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்