மேடையில் கர்ஜித்து கொண்டிருந்த சீமான்... தூங்கி வழிந்த அவர் கட்சி வேட்பாளர்... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருக்கும் போது அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேடையில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி வழிந்தார்.

மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சீமான் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

சேலம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராசா அம்மையப்பனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

இக்கூட்டத்தில் சீமான் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினர். அப்போது நாம் தமிழர் கட்சியின் சேலம் வேட்பாளர் ராசா அம்மையப்பன் மேடையில் தனியாக நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

நீண்ட நேரமாக அமர்ந்திருந்ததால் அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண் சொக்கிய படியே நாற்காலியில் அமர்ந்து தூங்கித் தூங்கி விழுந்தார்.

பின்னர் கீழே அமர்ந்திருந்த கட்சி நிர்வாகிகள் அவரை கை ஜாடையில் அழைத்து தூங்காமல் இருக்கும்படி அறிவுறுத்தினார்.

இருப்பினும் அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தபடி இருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்