கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி.... குளித்துவிட்டு வந்த போது நேர்ந்த பயங்கரம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டு தப்பித்து ஓடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் இம்ரான் சலீம். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இம்ரான் மனைவி சமையலறையில் பாத்திரத்தில் எண்ணெயை கொதிக்க வைத்து சமைத்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கும், இம்ரானுக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் பின்னர் இம்ரான் குளியலறைக்கு குளிக்க சென்றார்.

குளித்துவிட்டு இம்ரான் வெளியில் வந்த போது அடுப்பில் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை அப்படியே இம்ரான் மீது ஊற்றியுள்ளார் அவர் மனைவி.

பின்னர் வீட்டிலிருந்து தப்பித்து ஓடினார், இதையடுத்து வலியால் துடித்த இம்ரானின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொலிசார் இம்ரான் மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இம்ரானுக்கும், அவர் மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

ஆனால் இந்த முறை ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறி இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்