கேரளாவில் மர்மமாக இறந்துகிடந்த திருநங்கை! பாலியல் தொழில் செய்த போது நடந்த விபரீதமா? சிக்கிய சிசிடிவி காட்சிகள்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் திருநங்கை சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.

கோழிகோடில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் ஷாலு என்ற திருநங்கை நேற்று காலை சடலமாக கிடந்தார்.

இதை அவ்வழியே சென்ற மக்கள் பார்த்த நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷாலு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் ஷாலு கொலை செய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளதாக திருநங்கைகள் ஆர்வலர் சிஸ்லி ஜார்ஜ் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஷாலு கொலை செய்யப்பட்டிருக்கலாம், ஏனெனில் தன்னை சிலர் துன்புறுத்தி வருவதாக முன்னரே அவர் புகார் தெரிவித்திருந்தார், அவரின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் உண்மைகள் வெளிவரும் என கூறியுள்ளார்.

உயிரிழந்த ஷாலு பாலியல் தொழில் செய்து வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர், இது சம்மந்தமாக அவர் அங்கு வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷாலு இறந்து கிடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்ததில் இரண்டு ஆண்கள் அங்கு இருந்தது தெரியவந்துள்ளது.

இதை நோக்கியே பொலிசார் விசாரணை இருக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்