நட்சத்திர அந்தஸ்து பிரசாரகராக மாறிய சித்து

Report Print Arbin Arbin in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நட்சத்திர அந்தஸ்து பிரசாரகராக களமிறங்க உள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா என இருவர் மட்டுமே தற்போது முக்கிய பிரசாரகராக உள்ளனர்.

இவர்களை தவிர மக்களை கவரும் முக்கிய நபர்கள் இல்லை. ஆனால் இப்போது இந்த இடத்தை கிரிக்கெட் வீரர் சித்து பிடித்துள்ளார்.

பஞ்சாபில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சித்து, தற்போது பஞ்சாபில் அமைச்சராக உள்ளார்.

சித்து மிகச்சிறந்த பேச்சாளர். கருத்துக்களை மக்களுக்கு எளிதாக எடுத்துக் கூறுவதுடன் கேலி, கிண்டலுடன் மக்கள் மனம் மகிழும் வகையில் பேசுவார்.

சமீபத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் அவர் பிரசாரத்துக்கு அழைக்கப்பட்டார். அவரது பிரசாரம் நன்றாக எடுபட்டது.

இப்போது பாராளுமன்ற தேர்தலிலும் அவரை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர். பல மாநிலங்களில் தங்கள் ஊருக்கு பிரசாரம் செய்வதற்கு அவரை அழைத்த வண்ணம் உள்ளனர்.

எனவே இந்தி பேசும் மாநிலங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார். மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

பிரியங்கா தங்கள் மாநிலத்துக்கு வந்து பிரசாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல தலைவர்களும் அழைக்கிறார்கள்.

ஆனால் உத்தரபிரதேசத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டியது இருப்பதால் அதிக அளவில் வெளி மாநில பிரசாரம் செல்ல முடியாத நிலை.

அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தை தவிர்த்து உத்தரகாண்ட், டெல்லி மாவட்டங்களில் பிரியங்கா பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்