என் மகன் அப்படி செய்திருக்கமாட்டான்: 6 வயது சிறுமி கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி சந்தோஷ்குமாரின் தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ்குமார் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில் தான் சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்திருக்கிறார்.

சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டதை, அவரது பாட்டி பார்த்திருக்கலாம் என்றும் அதனால் அவரையும் சந்தோஷ்குமார் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சந்தோஷ்குமாரின் தந்தை கூறியதாவது, எனது மகன் இப்படி ஒரு செயலில் ஈடுபடவில்லை. அன்றைய தினம் முழுவதும் அவன் எங்களுடன் தான் இருந்தான். பாட்டியின் மரணமும் இயற்கையானது என்று கூறியுள்ளார்.

இறந்துபோன சிறுமியின் தாய் கூறியதாவது, எனது மகளை கொலை செய்த அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். குறிப்பாக என் கையில் தான் தண்டனை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers