யார் இந்த ஹொட்டல் சரவணபவன் ராஜகோபால்? குடிசை வீடு முதல் கோடிகள் வரை... பெண்ணால் சரிந்த மனிதர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சாதாரண குடிசை வீட்டில் பிறந்து தனது கடின அழைப்பால் பிரமிக்க தக்க வகையில் தனி சம்ராஜ்ஜியத்தை நடத்திய ராஜகோபாலில் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களை கொண்டது.

சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன.

2 மனைவிகள்! ஜோதிடர் கூறியதை கேட்டு பெண்ணின் மீது சபலத்தால் சரிந்துபோன சரவணபவன் ஹொட்டல் உரிமையாளரின் வாழ்க்கை

1947 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புன்னையாடி என்ற கிராமத்தில் இருந்து வந்தவர் ராஜகோபால்.

ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், வயிற்றுப் பிழைப்புக்காக ஹொட்டலில் மேசையை துடைக்கும் வேலையை செய்துள்ளார். அப்படியே மெதுவாக டீ போட கற்றுக்கொண்ட இவர், நாளடைவில் ஒரு மளிகை கடையில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

மளிகை கடையில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து தனது தந்தையுடன் சேர்ந்து தனியாக மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார். ஆனால் இளம்வயதான ராஜகோபாலுக்கு கடையை நடந்துவது என்பது மிகவும் சவாலாக இருந்தது.

மளிகை கடையை நடத்தி வந்த இவர் 1981 ஆம் ஆண்டு வெளியிடங்களில் சாப்பாட்டிற்கு இருந்த தேவையை உணர்ந்த சரவணபவன் உணவகத்தை ஆரம்பித்தார்.

உணவகம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை ராஜகோபால், உணவின் சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினார். இதுவே இவரது வெற்றிக்கு அடித்தளமிட்டது.

தனது தொழிலில் நஷ்டமடைந்தாலும் தரமான உணவை கொடுப்பதை அதிக ஆர்வம் காட்டி வந்த காரணத்தால் காலப்போக்கில் சரவணபவன் என்ற ஹொட்டலில் நற்பெயர் வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் நஷ்டங்கள் லாபங்களாக மாறின.

ராஜகோபால் தட்டின் மீது வாழையிலையைப் பரப்பி அதன் மீது உணவு பரிமாறும் பழக்கத்தைத் தொடங்கினார்.

அது ஏற்கனவே வேறொருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுகிறோமே என்கிற வாடிக்கையாளர்களின் சஞ்சலத்தைப் போக்கியதோடு பணியாளர்களுக்குத் தட்டுக்களைக் கழுவும் வேலையையும் சுலபமாக்கியது.

சென்னை கேகே நகரில் 14-12-1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சரவணபவன் இன்று உலகின் பல இடங்களிலும் விரிவடைந்து தற்போது 91 கிளைகளுடன் வெற்றிச் சாம்ராஜியமாக உள்ளது.

கடைசியாக சரவணபவன் 04-03-2016ஆம் ஆண்டு நெதர்லாந்து, ஆம்ஸ்டரடேம் பகுதியல் தனது 9வது கிளையைத் திறந்ததுள்ளது.

சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டொலர். தனது நேர்மையான உழைப்பால் வெற்றிகளை தனக்கு சாகமாக்கி கொண்டு ராஜகோபால் தனது சுயசரிதையில் கூறிய வார்த்தை "நான் எனது இதயத்தை வெற்றியின் மீது பொருத்திவிட்டேன் " என்பதுதான்.

2001 ஆம் ஆண்டு ஜீவஜோதி என்ற பெண்ணுக்காக அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக இவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers