பள்ளி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவரது பெற்றோர் கூலி வேலை செய்வதால், அவர்கள் வீட்டில் இல்லாத சூழலில் மாணவியை கவனிக்க நேரமின்றி இருந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவியின் வீட்டிற்கு அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டி(23) என்ற நபர், ஆசை வார்த்தைக் கூறி மாணவியை தனியாக அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த விடயம் மாணவியின் தாயாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, உடனடியாக பொலிசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் தங்கப்பாண்டியை கைது செய்த பொலிசார், அவரை சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...